கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் ரயில்வேக்கு கிடைத்த வருமானம் ரூ.1,712 கோடி. இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் வருமானம் ரூ.2,102 கோடியாக அதிகரித்துள்ளது. இது 22.8 விழுக்காடு உயர்வாகும்.
கடந்த ஆண்டில் சரக்குப் போக்குவரத்து மூலமாக கிடைத்த வருமானம் ரூ.1,164 கோடி. இது இந்த ஆண்டில் 23.85 விழுக்காடு அதிகரித்து ரூ.1,441 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் பயணிகள் போக்குவரத்தால் ரூ.491 கோடியும் இந்த ஆண்டில் ரூ.601 கோடியும் கிடைத்துள்ளது. இது 22.3 விழுக்காடு உயர்வாகும்.
பெட்டிகள் தயாரிப்பு மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டு ரூ.44 கோடி. இது இந்த ஆண்டில் 4.4 விழுக்காடு அதிகரித்து ரூ.46 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜூலை 11 முதல் 20ஆம் தேதி வரை 18.99 கோடி பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் 19.34 கோடியாக உயர்ந்துள்ளது. இது 1.82 விழுக்காடு அதிகரிப்பாகும்.
புறநகர் ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 11.01 கோடியில் இருந்து 10.46 கோடியாக குறைந்துள்ளது. இது 4.99 விழுக்காடு குறைவு. மற்ற ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 7.98 கோடியில் இருந்து 8.88 கோடியாக அதிகரித்துள்ளது. இது 11.22 விழுக்காடு வளர்ச்சியாகும். இத்தகவல்களை ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.