மல்டி கமோடிட்டி எக்ஸ்சேஞ்சின் முன்பேர சந்தையில் டிசம்பர் மாதத்திற்கான தங்கம் விலை 10 கிராம் ரூ.13,482 ஆக உயர்ந்தது. இது முந்தைய ஒப்பந்தத்தை விட 0.97% அதிகம்.
2009 மார்ச் மாதத்திற்குரிய ஒப்பந்தத்திற்கான வெள்ளி விலை 1 கிலோ ரூ.26,048 ஆக (+0.52%) அதிகரித்தது. வரும் செப்டம்பர் மாதத்திற்கான பிளாட்டினம் விலை 10 கிராம் ரூ.26,200 (+0.76%) ஆக அதிகரித்தது.
மற்ற உலோகங்களின் விலையும் அதிகரித்தது. ஜூலை மாதம் அலுமினியம் 1 கிலோ ரூ.128.80 (+0.23%), தாமிரம் 1 கிலோ ஆகஸ்ட் மாதம் ரூ.348.95 (+0.75%), நவம்பர் மாதம் ரூ. 348.95 (+0.75%).
நிக்கல் செப்டம்பர் 1 கிலோ ரூ.911 (+1.76%), துத்தநாகம் செப்டம்பர் 1 கிலோ ரூ.81.55 (+1.62%)
ஏலக்காய் அக்டோபர் 1 கிலோ ரூ.625.75 (+0.52%), மஞ்சள் ஆகஸ்ட் 100 கிலோ ரூ.5,096 (+0.45%).
இவை மல்டி கமோடிட்டி எக்ஸ்சேஞ் எனப்படும் முன் பேர சந்தையில் நேற்று ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றிய தகவல்.