‌நியாய‌விலை கடைகளில் பருப்பு, பாமாயில் விற்பனை நீட்டிப்பு!

வியாழன், 17 ஜூலை 2008 (11:12 IST)
நியாய‌விலகடைகளில் மானிய விலையில் பருப்பு வகைகள், பாமாயில், கோதுமை மாவு, ரவை, மைதா போன்றவற்றை வழங்குவதை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று மாலை அமைச்சரவையின் 29-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தது தொடர்பான விசாரணை க‌மிஷ‌னஅ‌றி‌க்கையசட்டமன்ற கூட்டம் நடைபெறும்போது வைப்பதென்று முடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழகத்திலே உள்ள முக்கிய தொழில் அதிபர்களை எல்லாம் வெள்ளிக்கிழமை அழைத்து பேசி மின் பற்றாக்குறை நிலையை எப்படி நிர்வகிப்பது என்று முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், நியாய விலைக் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, ரவை மற்றும் மைதா ஆகிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் தொடர்ந்து வழங்குவது பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, இந்த திட்டத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு தொடருவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்