வடசென்னை மின் நிலையம் அமைக்கும் பணியில் பி.ஹெச்.இ.எல்.

வெள்ளி, 11 ஜூலை 2008 (18:43 IST)
வடசென்ணை அனல் மின் உற்பத்தி இயந்திரங்களை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை பாரத மிகு மின் நிறுவனம் பெற்றுள்ளது.

வடசென்னையில் 600 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி திறனுடன் கூடிய அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு மின் வாரியத்திடம் இருந்து, இந்த மின் உற்பத்தி இயந்திரங்கள் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை பெற்று இருப்பதாக பெல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் மிகு மின் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதன் மொத்த மதிப்பு ரூ.2,175 கோடி.

இதற்கு தேவையான பாய்லர் மற்றும் இதன் துணை இயந்திரங்கள் திருச்சி, ராணிபேட்டையில் பாரத் மிகு மின் நிறுவன தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும்.

நீராவி டர்பைன், ஜெனரேட்டர் ஹரித்துவாரில் உள்ள இதன் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.

ஹாதரபாத்தில் உள்ள தொழிற்சாலையில் பம்புகள், வெப்பமாக்கும் இயந்திரங்கள் தயாரிக்கப்படும். பெங்களூருவில் உள்ள தொழிற்சாலையில் மின் உற்பத்தி இயந்திரங்களுக்கு தேவையான நவீன கட்டுப்பாட்டு கருவிகள் தயாரிக்கப்படும்.

பாரத் மிகு மின் நிறுவனம். இதற்கு முன்பு வடசென்னை மின் உற்பத்தி நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரங்களை நிறுவும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஊத்தங்குடியில் தலா 800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க, தமிழ்நாடு மின் வாரியமும், பாரத் மிகு மின் நிறுவனமும் இணைந்து புதிய நிறுவனத்தை துவக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்