அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 13 பைசா அதிகரித்தது.
நியூயார்க் முன்பேர சந்தையில் ஆகஸ்ட் மாதத்திற்கான 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 136 டாலராக குறைந்தது.
இதே போல் ஆசிய சந்தையின் விலையும் 136.46 டாலாரக குறைந்தது. அத்துடன் பங்குச் சந்தை உயர்வு, மத்திய அரசுக்கு அரசியல் நெருக்கடி போன்ற காரணங்களினால் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.43.12 / 43.14 ஆக இருந்தது.
பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு அதிக மாற்றம் இல்லாமல் தொடர்ந்தது.
1 டாலர் ரூ.43.13 / 43.14 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 13 பைசா அதிகம்.