இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம்-ஆசிய வளர்ச்சி வங்கி!

செவ்வாய், 8 ஜூலை 2008 (16:20 IST)
இந்தியாவிலும், வங்காளதேசத்திலும்தான் அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்று ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.

இதன் ஆய்வறிக்கையில், “இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிக அளவு உயர்ந்துள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள 19 நாடுகளில் நடத்திய ஆய்வில் இருந்து, அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதால், குறைந்த அளவு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியவில்லை. அதிக அளவில் அரசு ஊழியர்கள் உள்ளதால் எவ்வித பொருளாதார வளர்ச்சியும் இல்லை.

இத்துடன் பிரச்சனையை தற்காலிக தீர்வு காணும் வகையில், கட்டுப்படியாக கூடியதை விட அதிக அளவு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது. உற்பத்தி அதிகரிக்காமல் ஊதியத்தை மட்டும் மாற்றி அமைப்பது, அரசியல்வாதிகள் தவறான வழியில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அல்லது வளங்களை தவறாக விநியோகிப்பது போன்றவைகளாலும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

வியட்நாமில் முன்பு அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டு வந்தது, தற்போது மாறியுள்ளது. இதனால் வியட்நாமில் கவலையளிக்க கூடியதாக இல்லை.

அரசு வழங்கும் அதிக ஊதியத்தால், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை அரசால் நிறைவேற்ற முடியாமல் போகிறது. அத்துடன் அரசால் அதிக வேலைவாய்ப்பு உருவாக்க முடியாமல் போவதால், அரசு வேலை தேடும் வேலை இல்லாதோரின் எண்ணிகக்கை அதிகரிக்கிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதில் இந்தியா போன்ற அதிக ஊதியம் வழங்கும் நாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதுடன், இதனால் ஏற்படும் சேமிப்பை வேலை வாய்ப்பை உருவாக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்