ரயில் சரக்கு கட்டண உயர்வு ரத்து!

வெள்ளி, 4 ஜூலை 2008 (18:28 IST)
ரயில்வே ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்த சரக்கு கட்டண உயர்வை ரத்து செய்துள்ளது.

ரயில்வே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு உணவு தானியம், உரம், கனிபொருட்கள், நிலக்கரி உட்பட பல்வேறு பொருட்களின் சரக்கு போக்குவரத்து கட்டணத்தை 5 முதல் 7 விழுக்காடு வரை அதிகரித்தது.

இந்த புதிய கட்டண விகிதம் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று ரயில்வே அறிவித்திருந்தது


பாக்ஸைட், சுண்ணாம்புக் கல், பெட்ரோலியபபொருட்கள் ஆகியவைகளுக்கு கட்டணம் 7 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

சரக்கு கட்டண அட்டவணை பட்டியலின் 120 வரிசையின் கீழ் உள்ள உரம், உணவு தானியம், மாவுப் பொருட்கள், பருப்பு, சிறு தானியம், பிண்ணாக்கு, எண்ணை வித்து, தோல், ரப்பர், பிளாஸ்டிக், இயந்திரம், இயந்திரக் கருவிகள் ஆகியவைகளின் சரக்கு கட்டணம் 7 விழுக்காடு உயர்த்தப்பட்டும் என்று அறிவித்தது.

இ‌ந்த புதிய கட்டணம் பற்றிய உத்தரவை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ரயில்வேயின் எல்லா பிரிவுகளுக்கும் அனுப்பியது.

பணவீககம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ரயில்வே கட்டண உயர்வு பல்வேறு பொருட்களின் விலையை அதிகரிக்கும். இத்துடன் அரசியல் ரீதியான காரணங்களினால் ரயில்வே உயர்த்துவதாக அறிவித்திருந்த சரக்கு கட்டணத்தை ரத்து செய்துள்ளது.

இதற்கான உத்தரவை புதன்கிழமையன்று தலைமை அலுவலகத்தில் இருந்து மற்ற பிரிவுகளுக்கு அனுப்பியுள்ளது.

இதில் முந்தைய கட்டண உயர்வு உத்தரவை செயல்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்