பணவீக்கம் 11.63 விழுக்காடாக உயர்வு!

வெள்ளி, 4 ஜூலை 2008 (12:26 IST)
பணவீக்கம் 11.63 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு இன்று ஜூன் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான பணவீக்கம் பற்றிய விபரத்தை வெளியிட்டது.

இந்த வாரத்தில் உணவு பொருட்களின் விலை, குறிப்பாக பழங்கள், காய்கறி, சமையல் எண்ணெய், தேயிலை, மீன், சிமெ‌ண்‌ட், இரும்பு, உருக்கு, மசலா பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், பணவீக்கம் அதிகரித்து வருகிறது.

சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.32 விழுக்காடாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்