டாலர் மதிப்பு 4 பைசா உயர்வு!

திங்கள், 30 ஜூன் 2008 (13:49 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 4 பைசா அதிகரித்தது.

பெட்ரோலிய நிறுவனங்கள் உட்பட பல இறக்குமதியாளர்கள் டாலரை வாங்குவதால், டாலரின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 42.90 / 42.92 ஆக இருந்தது. பிறகு வர்த்தகம் நடக்கும் போது டாலரின் மதிப்பு உயர்ந்து, 1 டாலரின் விலை ரூ.42.92 / 42.94 ஆக அதிகரித்தது.

இது வெள்ளிக் கிழமை விலையை விட, 4 பைசா அதிகம். வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 42.88 / 42.89.

மற்ற அந்நிய செலவாணிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது. இதனால் இன்று ஆசிய சந்தைக்கான கச்சா எண்ணெய் விலை சுமார் 142 டாலராக அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்