டாலர் மதிப்பு 4 பைசா சரிவு!

வியாழன், 26 ஜூன் 2008 (13:09 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 4 பைசா குறைந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 42.66 / 42.67 ஆக இருந்தது.

பின்னர் வர்தத்தம் நடக்கும் போது டாலரின் மதிப்பு அதிகரித்து 1 டாலர் ரூ.42.74 / 42.75 என்ற அளவில் விற்பனையானது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 4 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 42.70 / 42.71.

காலையில் பங்குச் சந்தை அதிகரித்தது. இதனால் ரூபாயின் மதிப்பு குறைந்தது.

பிறகு பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்க துவங்கியதால், டாலரின் மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக அளவு டாலரை வாங்கும் என்று தெரிகிறது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. வங்கிகளும் டாலரை விற்பனை செய்தன.

இதே நேரத்தில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பு அதிகரித்து உள்ளது என்ற தகவலை அடுத்து, நேற்று நியூ யார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய்க்கு 3.5 டாலர் குறைந்தது. ஒரு பீப்பாய் விலை 133.50 டாலராக குறைந்தது.

இது போன்ற காரணங்களினால் டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்