அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா அதிகரித்தது.
காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 42.96 / 42.97 ஆக இருந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 3 பைசா குறைவு. வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 42.93/42.94
பங்குச் சந்தையில் காலையில் இருந்தே அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்கின்றன. அத்துடன் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் சரிந்து வருவதால், டாலரின் தேவை அதிகரித்தது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்தது.
ஆசிய நாடுகளுக்கான பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மீண்டும் 1 பீப்பாய் 136 டாலராக அதிகரித்தது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கின.
1 டாலரின் மதிப்பு ரூ.43க்கும் குறையாமல் இருக்கும் வகையில், ரிசர்வ் வங்கி தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.