ஊதிய உயர்வு-தொழிலதிபருக்கு சிறை!

சனி, 21 ஜூன் 2008 (13:19 IST)
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்ததாக ஜோதி ஓவர்சிஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரமோத் சோமானிக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் விதிக்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் சிஜ்வயா என்ற நகரில் ஜோதி ஓவர்சிஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம் 1997ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட இடைப்பட்ட காலத்திற்கு ஊதிய உயர்வு வழங்குமாறு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பின் படி ஜோதி ஓவர்சிஸ் நிறுவனம், ஊதிய உயர்வு வழங்கவில்லை என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.கிரியா, தொழிலாளர் நீதி மன்றத்தின் தீர்ப்பை அமல் படுத்தாமல் நீதி மன்றத்தை அவமதித்தாக கூறி ஜோதி ஓவர்சிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரமோத் சோமானிக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.3,000 அபாரதம் விதித்து தீர்ப்பளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்