சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!

சனி, 31 மே 2008 (14:28 IST)
அந்நிய நாடுகளில் இருந்து சென்ற நிதி ஆண்டில், அதிக அளவு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விபரப்படி, சென்ற நிதி ஆண்டில் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி உயரவில்லை. சென்ற நிதி ஆண்டில் ரூ.28,664 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது (முந்தைய நிதி ஆண்டில் ரூ.28,508)

சமையல் எண்ணெய் சென்ற நிதி ஆண்டில் ரூ.10.990 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது (முந்தைய நிதி ஆண்டில் ரூ.10,086). இதற்கு முக்கிய காரணம் சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி 21 விழுக்காடு அதிகரித்துள்ளதே.

சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி 9.5 விழுக்காடும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 5 விழுக்காடும் உயர்ந்துள்ளது.

அந்நிய நாடுகளில் இருந்து சென்ற நிதி ஆண்டில் மொத்தம் ரூ.94,9134 கோடி மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன (முந்தைய நிதி ஆண்டில் ரூ.8,40,506) இதில் அத்தியாவசிய பொருட்களின் அளவு 3.4 விழுக்காடு மட்டுமே.

உணவு தானியங்கள், பால், பால் பொருட்களின் இறக்குமதி குறைந்துள்ளது. அதே நேரத்தில் சமையல் எண்ணெய், பழங்கள், பாதம் பருப்பு போன்றவைகள், பருத்தி, பட்டு, வாகனம், ரப்பர், மதுவகைகள், மார்பிள், கிரைனெட், தேயிலை, காபி ஆகியவற்றின் இறக்குமதி அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியா, கனடா, சீனா, அமெரிக்கா, ஸ்ரீலங்கா, பிரேசில், ஜெர்மனி, தான்ஜினியா, தாய்லாந்து, ஜப்பான், பிரிட்டன், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் அர்ஜென்டைனா, மியான்மர், ரஷியா, ஐவரி தீவுகள், மலேசியா, ஆஸ்திரோலியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்