இழப்பை ஈடுகட்ட சிறப்பு வரி செய்தி ஆதாரமற்றது : நிதி அமைச்சகம்!

புதன், 28 மே 2008 (14:20 IST)
பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, வருமான வரி, நிறுவன வரி மீது சிறப்பு வரி விதிக்கப்படாலாம் என்று வந்த செய்தி ஆதாரமற்றது என்று மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.

“நிதி அமைச்சகத்துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்திற்கும் இடையே வழக்கமாக நடைபெறும் கூட்டத்தில், புதிய வரி விதிக்கப்படாலாம் என்ற வந்த செய்திகள் நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த செய்தி வேண்டுமென்றே வெளியிடப்பட்டது, குறிப்பாக புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்ற செய்தி ஆதாரமற்றது.

நேற்று நடந்த கூட்டத்திற்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்களை வழங்குவதற்கு பதிலாக, மத்திய அரசு இறக்குமதி வரி, உற்பத்தி வரியை குறைக்கும்.

மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் வழங்குவதை ஈடுகட்ட, வருமான வரி மீது, கூடுதல் வரி விதிக்கப்படாலாம் என்ற செய்தி சில பத்திரிக்கைகளில், தொலைகாட்சி உட்பட பல்வேறு ஊடகங்களில், வெளியிடப்பட்டது. இத்தகைய செய்திகள் ஆதாரமற்றது. நிதி அமைச்சகத்தின் சார்பில் யாரும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கவில்ல” என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்