பொதுத்துறை நிறுவனமான ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் உருக்கு, இரும்பு, கம்பி, தகடு உட்பட எல்லா ரகங்களின் விலைகளையும் டன்னுக்கு ரூ.6 ஆயிரம் உயர்த்தியுள்ளது.
உருக்கு, இரும்பு விலை குறைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் விசாகப்பட்டினம் உருக்காலையின் துணை நிறுவனமான ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் விலையை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மற்ற உருக்கு நிறுவனங்கள் விலையை உயர்த்தின. ஆனால் செயில் என்று அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரட்டி ஆப் இந்தியா லிமிடெட், விலையை உயர்த்தவில்லை. இப்போது ராஷ்டிரிய இஸ்பாட் விலை உயர்த்தியுள்ளதால், இது செயிலும் விலையை உயர்த்த வழிவகுக்கும் என்று தெரிகிறது.
ஏற்கனவே சென்ற வாரத்தில் ஜே.எஸ்.டபிள்யூ, இஸ்பாட்,எஸ்ஸார், டாடா ஸ்டீல் ஆகிய உருக்கு நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.