மத்திய அரசு நிறுவனமான ஊரக மின் கட்டமைப்பு கார்ப்பரேஷன் இந்த மாதம் முன்றாவது வாரத்தில் பங்குச் சந்தையில் மூலதனம் திரட்ட உள்ளது.
இந்நிறுவனம் ஒரு பங்கு ரூ.90 முதல் 105 வரை என நிர்ணயிக்கும் என தெரிகிறது. இதற்கான அனுமதியை கேட்டு கம்பெனிகள் பதிவாளரிடம் விண்ணப்பித்துள்ளது. நாளை முதல் நிறுவனத்தின் தொழில் வர்த்தக வாய்ப்புகள், பங்குகளை வாங்குவதால் கிடைக்கும் இலாபம் போன்றவற்றை விளக்குவதற்கான கூட்டம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிறுவனம் 15.61 கோடி பங்குகளை வெளியிட்டு ரூ.1,200 கோடி மூலதனம் திரட்ட உள்ளது. இந்த பங்குகளில் 39 லட்சம் பங்குகள் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கிராமப்புறங்களில் மின் வசதி ஏற்படுத்தும் திட்டங்களுக்கு கடன் வழங்குகிறது.