ஸ்டேட் வங்கி உரிமை பங்கு வெளியீடு!

திங்கள், 14 ஜனவரி 2008 (19:05 IST)
பாரத ஸ்டேட் வங்கி உரிமைப் பங்குகளை வெளியிட்டு ரூ.16 ஆயிரத்து 736 கோடி திரட்டுகிறது.

இந்த உரிமை பங்கு வெளியிடுவதற்கு இன்று மும்பையில் கூடிய வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் தெரிவித்தது.
இந்த உரிமை பங்குகள் 5:1 என்ற விகிதத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் (இதன் படி தற்போது 5 பங்குகளை வைத்துள்ளவர்களுக்கு 1 பங்கு ஒதுக்கப்படும்).

பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கு, ரூ.1,580 பிரிமியத்தில் ஒரு உரிமை பங்கின் விலை ரூ.1,590 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பங்கின் சராசரி விலை ரூ.2,490 என கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை 90 விழுக்காடுக்கும் மேல் அதிகரித்தது. இன்று இந்த அறிவிப்பு வந்தவுடன் பங்கின் விலை ரூ.2,540 வரை அதிகரித்தது. இறுதியில் ரூ.2,462.25 என முடிந்தது. இது வெள்ளிக் கிழமை விலையுடன் ஒப்பிடுகையில் 1.03 விழுக்காடு உயர்வு.

வெப்துனியாவைப் படிக்கவும்