ரிலையன்ஸ் பங்கு விற்பனை!

Webdunia

திங்கள், 26 நவம்பர் 2007 (17:23 IST)
ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தில் உள்ள 18 கோடியே 40 ஆயிரம் பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் ரூ.4,023 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.

ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தில், 75 விழுக்காடு பங்குகள் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் வசம் இருந்தது. இது ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 4.01 விழுக்காடு பங்குகளாகும்.

இந்த பங்குகள் பங்குச் சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் பொது பங்கு வெளியிட்ட போது, இந்நிறுவனத்தில் 12 லட்சம் பங்குநர்கள் இருந்தனர். இப்போது விற்பனை செய்யப்பட்டுள்ள பங்குகளால் பங்குநர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக உயர்ந்துள்ளது என்று இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்