சென்செக்ஸ் 20 ஆயிரம் தாண்டுமா?

Webdunia

திங்கள், 29 அக்டோபர் 2007 (12:07 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே, சென்செக்ஸ் குறியீட்டு எண் 549 புள்ளிகள் அதிகரித்து 19,792.51 புள்ளிகளை தொட்டது.

மும்பை பங்குச் சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு, இன்று ஒரு நிலையில் சென்செக்ஸ் 19,859.47 புள்ளிகளாக அதிகரித்தது.

இதற்கு முன் கட‌ந்த வெள்ளிக்கிழமை (26ஆ‌ம் தே‌தி) 19,276.45 புள்ளிகளை தொட்டது. அதற்கு முன் கட‌ந்த 18ஆ‌ம் தேதி 19,198.66 புள்ளிகளை தொட்டது.

இன்று காலை தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 144 புள்ளிகள் அதிகரித்து 19,859.47 புள்ளிகளாக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 11.10 நிலவரப்படி சென்செக்ஸ் 19,884 புள்ளிகளாக உள்ளது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 641.27 புள்ளிகள் உயர்ந்து 19,884.44 புள்ளிகளாக இருக்கின்றது. மும்பை பங்குச் சந்தையின் இதர பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்து காணப்படுகிறது.

மிட் கேப் 166.4 புள்ளிகள் அதிகரித்து 8,086.91 புள்ளிகளாகவும், சுமால் கேப் 221.06 புள்ளிகள் அதிகரித்து 9772.01 புள்ளிகளாகவும், பி.எஸ்.இ 100 பிரிவு 320.79 புள்ளிகள் அதிகரித்து 10,323.55 புள்ளிகளாகவும், பி.எஸ்.இ 200 பிரிவு 72.02 புள்ளிகள் அதிகரித்து 2,426.47 புள்ளிகளாகவும், பி.எஸ்.இ 500 226.31 புள்ளிகள் அதிகரித்து 7,737.63 புள்ளிகளாக இருக்கின்றது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி காலை 11.10 நிலவரப்படி 5877.05 புள்ளிகளாக இருக்கின்றது. இது வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தை விட 175.02 புள்ளிகள் அதிகம்.

தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்து காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளான கிரேச‌ம், ஹெச்.டி.எப்.சி, ஹுன்டால்கோ, இன்போசியஸ், டி.சி.எஸ், ஐ.டி.சி, எல்.அண்ட் டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, என்.டி.பி.சி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் எனர்ஜி, சத்யம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா மோட்டார், விப்ரோ, ஏ.சி.சி, ஏ.சி.எல், பஜா‌ஜ் ஆட்டோ, பர்தி ஏர்டெல், பி.ஹெச்.இ.எல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச் டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது.

டாடா ஸ்டீல் பங்கு விலை மட்டும் குறைந்தது.

நாளை ரிசர்வ் வங்கி பொருளாதார கொள்கையை அறிவிக்க உள்ளது. இந்த எதிர்பார்ப்பில் வங்கிகளின் பங்கு விலை அதிகரித்தது.

மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலை அதிகரித்த காரணத்தினால், அதன் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இன்று சென்செக்ஸ் குறியீட்டு எண் 20 ஆயிரத்தை எட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு பங்குச் சந்தை வட்டாரங்களில் நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்