பங்குச் சந்தை சரிவு - வர்த்தகம் நிறுத்தம்

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (11:25 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இன்று வரலாறு காணாத அளவில் குறியீட்டு எண் வீழ்ச்சி அடைந்தது.

இதனால் மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் 1 மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இன்று காலை 10 மணிக்கு பங்குச் சந்தை அறிவித்தது.

காலையில் மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் தெடங்கியதுமே எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு குறைவாகவே வர்த்தகம் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் குறியீட்டு எண் 1,743 புள்ளிகள் சரிந்தது 17,307 ஆக குறைந்தது. ( நேற்றைய இறுதி நிலவரம் 19051.86 )

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிப்டி 525 புள்ளிகள் சரிந்து, 5143 புள்ளிகளாக குறைந்தது. ( நேற்றைய இறுதி நிலவரம் 5668 ).

பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி, மும்பை பங்குச் சந்தையிலும் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலைகள் 10 விழுக்காடு, 15 விழுக்காடு, 20 விழுக்காடு குறையும் போதும், ஒரு மணி நேரம் வர்த்தகத்தை நிறுத்தும் படி கூறியுள்ளது.

இதன்படி பங்குச் சந்தையில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்