ஆந்திர மாநிலம், ஹைதரபாத்தைச் சேர்ந்த விரிஞ்சி டெக்னாலஜிஸ் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் இடர்நீக்கும் பணிகளை செய்து வருகிறது. இது மூன்றாவது மென்பொருள் வடிவமைப்பு மையத்தை செகந்திராபாத்தில் நேற்று துவக்கியது.
இந்த மையத்தில் 175 மென்பொருள் வடிவமைப்பாளர்கள் பணிபுரிவார்கள். இதனால் இந்நிறுவனத்தில் மென்பொருள் வடிவமைப்பாளர்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரிக்கும்.
இந்த புதிய மையத்தில் நிதி தொடர்பான நிறுவனங்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு, வாடிக்கையாளின் பணிகளுக்கு உதவுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த புதிய மையம் குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அனில் குமார் பினபாலா கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் மென்பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் சிறந்த வரவேற்பு உள்ளது. இதனால் இந்த நாடுகளில் இருந்து புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர் என்றார்.
இந்த இரு நாடுகளிலும், நாங்கள் வடிவமைக்கும் மென்பொருளுக்கு உள்நாட்டு போட்டியாளர்கள் அதிகளவில் இல்லை. எங்கள் நிறுவனம் மட்டம் தான், இந்தியாவில் இருந்து நிதி நிறுவனங்கள் தொடர்பான சேவைகளை ஜாவா, நெட் தளங்களில் நிறைவேற்றி கொடுக்கின்றது என்று அனில் குமார் பினபாலா தெரிவித்தார்.