9.99 விழுக்காடு வட்டியில் வீட்டுக் கடன்!

Webdunia

வியாழன், 20 செப்டம்பர் 2007 (18:36 IST)
சர்வதேச அளவில் கடன் வழங்கும் நிறுவனங்களான ஜி.இ. மணி மற்றும் விஜாரட் நிறுவனங்களும் இணைந்து, இந்தியாவில் வீட்டுக் கடன் வழங்குவதற்காக விஜாரட் ஹோம் லோன் என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளன.

இந்த புதிய நிறுவனத்தின் சார்பில் 9.99 விழுக்காடு வட்டியில் கடன் வழங்க உள்ளன. இதற்காக 20 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது.

இந்த கூட்டு நிறுவனம் சார்பில் வீட்டுக் கடன் வழங்குவதற்காக, நாடு முழுவதும் விஜாரட் ஹோம் லோன் அலுவலகங்கள் துவக்க உள்ளது. இது பல்வேறு நகரங்களில் 2011 ஆம் ஆண்டிற்குள் 250 கிளை அலுவலகங்களை திறக்க முடிவு செய்துள்ளது.

இதுபற்றி ஜி.இ. இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி டி.ி. சோப்ரா கூறும் போது, இந்தியாவில் ஜி.இ. மணி பல வருடங்களாக கடன் வழங்கும் துறையில் உள்ளது. நாங்கள் இந்திய கடன் சந்தையைப் பற்றி நன்கு அறிந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்