ஆந்திரா வங்கி வட்டி உயர்வு

Webdunia

திங்கள், 17 செப்டம்பர் 2007 (19:36 IST)
குறிப்பிட்ட காலத்திற்கு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டியை ஆந்திரா வங்கி உயர்த்தியுள்ளது!

இதன்படி ஒரு கோடி ரூபாயில் இருந்து ஐந்து கோடி ரூபாய் வரை 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை, அதே போல் 120 நாட்களில் இருந்து 179 நாட்கள் வரை டிபாசிட் செய்யப்படும் தொகைக்கு எட்டு விழுக்காடு வட்டி வழங்கப்படும்.

முன்பு இதற்கு 6.25 சதவித வட்டி வழங்கப்பட்டது. இதே போல் 120 நாட்களில் இருந்து 179 நாட்களுக்கு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கு 8.5 விழுக்காடு வட்டி வழங்கப்படும்.

இந்த புதிய வட்டி விகிதம் செப்டம்பர் 30ம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்படும். மற்ற வகை நிதிகளுக்கு முன்பிருந்த வட்டியே தொடரும் என்று ஆந்திர வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்