சென்செக்ஸ் 220 புள்ளிகள் சரிவு

வெள்ளி, 8 ஜூலை 2011 (16:59 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் இன்றைய வர்த்தக முடிவில் 220 புள்ளிகள் சரிவு கண்டு 18,858 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 68.30 புள்ளிகள் சரிவு கண்டு 5,660.65 புள்ளிகளுடன் நிறைவுற்றது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றின் பங்குகளின் விலை 2% முதல் 2.27% வரை குறைந்தது.

ஓ.என்.ஜி.சி, என்.டி.பி.சி., ஹீரோ ஹோண்டா, பி.பி.சி.எல்., ரேன்பேக்ஸி, சீமன்ஸ் நிறுவனப்பங்குகளின் விலை லாபம் ஈட்டியது.

வெப்துனியாவைப் படிக்கவும்