பங்குச் சந்தையில் உயர்வு
வியாழன், 9 ஜூன் 2011 (09:48 IST)
இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 27.92 புள்ளிகள் உயர்ந்து 18,422.21 புள்ளிகளாக காணப்படுகிறது.
இதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 4.15 புள்ளிகள் அதிகரித்து 5,531.00 புள்ளிகளாக உள்ளது.
இதற்கு முன்னால் ஆரம்பித்துள்ள ஆசிய பங்குச் சந்தைகள் சரிவுடனேயே காணப்படுகிறது.
ஜப்பான் பங்குச் சந்தை நிக்கி 27 புள்ளிகள் குறைந்தும், ஹாங்காங் பங்குச் சந்தை ஹன்செங் 236 புள்ளிகள் குறைந்து காணப்படுகிறது.
தென் கொரிய பங்கு சந்தை கோஸ்பி 6 புள்ளிகள் குறைந்தும், சீனா பங்குச் சந்தை ஷாங்காய் காம்போசிட் 20 புள்ளிகள் குறைந்தும் காணப்படுகிறது.
இதற்கு முன்னால் நேற்றிரவு முடிந்த அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்திருக்கிறது.
நவஜோன்ஸ் 22 புள்ளிகள் குறைந்து 12,049 புள்ளிகளுடனும், நாஸ்ஷாக் 26 புள்ளிகள் சரிந்து 2,625 புள்ளிகளுடன் முடிந்திருக்கிறது.
இன்று காலை நேர வர்த்தகப்படி இந்திய ரூபாயின் மதிப்பு 44 ரூபாய் 65 பைசாவாக காணப்படுகிறது.