சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்வு

செவ்வாய், 1 மார்ச் 2011 (16:28 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 623 புள்ளிகள் அதிகரித்து 18,446.50 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீடு நிப்டி அதிகபட்சமாக இன்று 189 புள்ளிகள் அதிகரித்து 5,522.30 புள்ளிகளாக நிறைவுற்றது.

இன்றைய உயர்முக வர்த்தகத்தில் மகீந்திரா, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், மாருதி சுசுகி, என்டிபிசி, ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகள், ஹின்டால்கோ, டாடா மோட்டார்ஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் கம்யூ., பஜாஜ், டாடா ஸ்டீல், டி.எல்.எஃப்., எச்.டி.எஃப்.சி. வங்கி ஆகியவற்றின் பங்குகள் ஏற்றம் கண்டன.

இன்றைய பங்கு வர்த்தகத்தில் எந்த ஒரு நிறுவனத்தின் பங்கு விலையிலும் குறைவு ஏற்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்