சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு

வியாழன், 20 ஜனவரி 2011 (17:27 IST)
யல் நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதினாலும் இன்று மதியம் வரை குறைந்துவந்த பங்குகளின் விலை, உணவுப் பொருட்கள் பணவீக்கம் குறைந்தததையடுத்து சென்செக்ஸ் 68 புள்ளிகளும், நிஃப்டி 20 புள்ளிகளுன் உயர்ந்தது முடிந்தது.

சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகத்தில் 114 புள்ளிகள் குறைந்து 18,794.73 புள்ளிகள் ஆனது. ஆனால் அதன் பிறகு மீண்டும் உயர்ந்து நேற்றைய வர்த்தகத்தின் முடிவை விட 68 புள்ளிகள் உயர்ந்து 19,046.54 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் நிதி நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் நல்ல முதலீட்டை பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்