மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 535 புள்ளிகள் சரிவு கண்டது.
உணவுப்பணவீக்கம் அதிகரித்ததால் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக வங்கிகள் மற்றும் ரியால்டி பங்குகள் விற்பனைக்கு வந்தன. இதனால் புள்ளிகளில் சரிவு எற்பட்டு 3.00 மணியளவில் 19,161.40 புள்ளிகளாகக் குறைந்தது.
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் 158.55 புள்ளிகள் குறைந்து 5,745.15 புள்ளிகளாகக் குறைந்தது.