சென்செக்ஸ் 143; நிப்டி 47 புள்ளிகள் உயர்வு
திங்கள், 6 டிசம்பர் 2010 (09:36 IST)
இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 143.37 புள்ளிகள் அதிகரித்து 20,110.30 புள்ளிகளுடனும், நிப்டி 47.35 புள்ளிகள் அதிகரித்து 6,040.15 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.
இதற்கு முன்னால் ஆரம்பித்துள்ள ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
ஜப்பான் பங்குச் சந்தை நிக்கி 80 புள்ளிகள் குறைந்தும், ஹாங்காங் பங்குச் சந்தை ஹன்செங் 120 புள்ளிகள் அதிகரித்தும் காணப்படுகிறது.
தென் கொரிய பங்கு சந்தை கோஸ்பி 6 புள்ளிகள் குறைந்தும், சீனா பங்குச் சந்தை ஷாங்காய் காம்போசிட் 4 புள்ளிகள் அதிகரித்தும் காணப்படுகிறது.
இதற்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை முடிந்த அமெரிக்க பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடனேயே முடிந்திருக்கிறது.
நவஜோன்ஸ் 20 புள்ளிகள் அதிகரித்து 11,382 புள்ளிகளுடனும், நாஸ்ஷாக் 12 புள்ளிகள் அதிகரித்து 2,591 புள்ளிகளுடன் முடிந்திருக்கிறது.
இன்று காலை நேர வர்த்தகப்படி இந்திய ரூபாயின் மதிப்பு 44 ரூபாய் 97 பைசாவாக காணப்படுகிறது.