பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்; சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிவு

புதன், 10 பிப்ரவரி 2010 (10:35 IST)
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் துவங்கிய போதும், அடுத்த சில நிமிடங்களிலேயே சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 10.30 மணி நிலவரப்படி 37 புள்ளிகள் சரிந்து 16,005 ஆக இருந்தது.

முன்னதாக வர்த்தகம் துவங்கும் போது 98.95 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 16141.13 புள்ளிகளாக அதிகரித்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 34.20 புள்ளிகள் அதிகரித்து 4,826.85 ஆக உயர்ந்தது. ஆனால் இந்த ஏற்றப் போக்கு நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இந்தியா சிமெண்ட்ஸ், வோல்டாஸ் லிமிடெட், ஹிந்துஸ்தான் காப்பர் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்த போதிலும், சன் ஃபார்மா, லான்கோ இன்ஃப்ராடெக், பாரத மிகுமின் நிறுவனம், ரேணுகா சுகர்ஸ் நிறுவனப் பங்குகள் விலை சரிந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்