வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது, அந்நியச் செலவாணி சந்தையில், ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது. 1 டாலரின் விலை ரூ.48.10 பைசாவாக குறைந்தது.
நேற்று டாலரின் இறுதி விலை ரூ.48.21 பைசா.
நேற்று கடந்த ஒரு மாதமாக இல்லாத அளவிற்கு குறைந்தது. பங்குச் சந்தையில் சாதகமான நிலை, மற்ற நாடுகளில் அந்நிய செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு குறைந்துத. இதுவே இந்திய அந்நியச் செலவாணி சந்தையிலும், ரூபாயின் மதிப்பு அதிகரித்து, டாலரின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மார்ச் மாதத்தில் இருந்து பங்குச் சந்தையில் 7.5 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. மார்ச் மாதம் 1 டாலரின் மதிப்பு ரூ.52.20 பைசாவாக இருந்தது. அந்நிய முதலீடு காரணமாக ரூபாயின் மதிப்பு 8.5 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.