நிஃப்டி 23-சென்செக்ஸ் 111 புள்ளி சரிவு

வியாழன், 5 பிப்ரவரி 2009 (18:12 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சில நிமிடங்களிலேயே குறைய துவங்கின. இன்று நாள் முழுவதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருநதது. இறுதியில் இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 110.97 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,090.88 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23.05 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 2,780.05 ஆக குறைந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 18.46, சுமால் கேப் 27.79, பி.எஸ்.இ 500- 29.89 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் எஸ்ஸார் சிப்பிங் நிறுவன பங்கு விலை 7.69 %, அக்ரூட்டி சிட்டி பங்கு விலை 7.32%, கிரேட் எஸ்டேட் பங்கு விலை 6.57%, சீசா கோவா பங்கு விலை 5.80%, யூனைடெட் ஸ்பிரிட் பங்கு விலை 5.61% அதிகரித்தது.

சின்டெக்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை 8.15%, ஸ்பைஸ் டெலிபோன் 7.45%, ஸ்டெர்லைட் இன்டஸ்டிரிஸ் 5.71%, மகேந்திரா அண்ட் மகேந்திரா 5.69%, ஏ.பி.பி 5.59% குறைந்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1001 பங்குகளின் விலை அதிகரித்தது. 1459 பங்குகளின் விலை குறைந்தது. 108பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்