மும்பை: தங்கம் வெள்ளி விலை சரிவு

திங்கள், 5 ஜனவரி 2009 (14:06 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55 குறைந்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தது.

இதே போல் லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 872.25/873.00 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை 874.00/874.25 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.45/11.47 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை 11.50/11.51 டாலர்).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,545
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,485
பார் வெள்ளி கிலோ ரூ.18,640.

வெப்துனியாவைப் படிக்கவும்