மும்பை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
இந்த வருடத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன. மத்திய அரசு மந்தகதியில் உள்ள பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டும் அறிவிப்பை அடுத்த சில நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 386 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், இன்று வர்த்தகம் தொடங்கும் போது 109.74 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,825.90 ஆக உயர்ந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23.15 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 3 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டி 3,002.65 ஆக உயர்ந்தது.
ஆனால் இன்றும் நேற்றைய நிலையே தொடர்கிறது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.
காலை 11.45 மணியளவில் நிஃப்டி 6.40 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 2,985.90 ஆக உயர்ந்தது. இதே போல் சென்செக்ஸ் 36.68 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,752.85 ஆக அதிகரித்தது.
மிட் கேப் 46.52, பி.எஸ்.இ. 500- 24.08, சுமால் கேப் 58.18 புள்ளிகள் அதிகரித்தன.