சென்செக்ஸ் 183-நிஃப்டி 57 புள்ளி உயர்வு

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (17:04 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, ஏற்ற இறக்கத்துடன் இருந்த குறியீட்டு எண்கள், மதியம் சுமார் 1.30 மணிக்கு பிறகு அதிகரிக்க துவங்கின. அதே நேரத்தில் கடைசி வரை அதிக அளவு மாறுபாடுடன் இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 182.64 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,716.16 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 57.30 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,979.50 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 68.46, பி.எஸ்.இ 500- 67.15, சுமால் கேப் 63.97 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1644 பங்குகளின் விலை அதிகரித்தது. 810 பங்குகளின் விலை குறைந்தது. 85 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 2.24%, ரியல் எஸ்டேட் பிரிவு 3.38%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.20%, தொழில் நுட்ப பிரிவு 2.73%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 1.20%, மின் உற்பத்தி பிரிவு 2.38%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 2.92%, உலோக 1.86%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 2.73% வாகன உற்பத்தி பிரிவு 3.09% அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்