சென்னை: ஒரு பவுன் தங்கம் ரூ.10,024
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (12:45 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் 10 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்கிறது. தங்கம் சவரனுக்கு ரூ.32ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.30ம் குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே மாற்றத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு சரவன் ரூ.10,056க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு பவுன் ரூ.10,024க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,525 (நேற்று ரூ.13,565)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,024 (ரூ.10,056)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,253 (ரூ.1,257)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,600 (ரூ.18,570)
வெள்ளி 10 கிராம் ரூ.199 (ரூ.198.50)
வெள்ளி 1 கிராம் ரூ.19.9 (ரூ.19.85)