மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.20 இருந்தது. இது வெள்ளிக் கிழமை மாலை நிலவரத்தை விட 26 பைசா குறைவு.
வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.45 பைசா. (வெள்ளிக் கிழமை டாலரின் மதிப்பு 39 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது )
வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு டாலரை விற்பனை செய்வதைல் டாலரின் மதிப்பு சரிந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.