மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.40-47.41 ஆக அதிகரித்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 14 பைசா உயர்வு.
வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.47.26 பைசா.
இன்று ஆசிய நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது. அத்துடன் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை சந்திப்பதாலும், டாலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.