மும்பை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே அதிக ஏற்ற இறக்கத்துடன் துவங்கியது.
காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 23.77, நிஃப்டி 7.75 புள்ளிகள் அதிகரித்து இருந்தன.
உலக முன்பேர சந்தையில் குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை இன்று சிறிது அதிகரித்தது. பிப்ரவரி மாதத்திற்கு 1 பீப்பாய் 43.30 டாலராக அதிகரித்தது. யூரோ உட்பட மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததால், அதன் தாக்கம் கச்சா எண்ணெயில் இருந்ததாக வர்த்தகர்கள் கருதுகின்றனர். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் அமைப்பில் உள்ள நாடுகள் ஜனவரி மாதம் முதல் தினசரி 2.2 மில்லியன் பீப்பாய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன. இதே போல் ஒபெக் அமைப்பில் இல்லாத நாடான ரஷியா, அஜர்பைஜான் ஆகியவையும் தினசரி 30 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன. ஜனவரி மாதம் தொடங்கும் உற்பத்தி குறைப்பால் விலை உயர்வதாகவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க அரசு அந்நாட்டின் மூன்று வாகன உற்பத்தி நிறுவனங்களின் நெருக்கடியை தீர்க்கும் வகையில் 17.4 பில்லியன் டாலர் அவசரகால கடன் அறிவித்துள்ளது. இது சிறது நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன் 25.88 புள்ளிகள் குறைந்தது. ஆனால் எஸ் அண்ட் பி 500-2.60, நாஸ்டாக் 11.95 புள்ளிகள் அதிகரித்தது.
ஐரோப்பிய நாடுகளில் வெள்ளிக் கிழமை ஸ்பெயின் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-43.73 புள்ளிகள் குறைந்தன.
இந்தியாவில் பங்குச் சந்தைகளில் டிசம்பர் மாத முன்பேர ஒப்பந்தம் இன்று முடிவடைகிறது. இதனால் இரண்டு பங்குச் சந்தைகளிலும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.
காலை 10.31 மணியளவில் நிஃப்டி 12.40 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3,089.90 ஆக அதிகரித்தது. இதே போல் சென்செக்ஸ் 4.67 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,104.58 ஆக அதிகரித்தது.
மிட் கேப் 61.97, பி.எஸ்.இ. 500- 23.66, சுமால் கேப் 56.16 புள்ளிகள் அதிகரித்தது.
ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று காலை ஜப்பான், மலேசியா தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது.
ஹாங்காங்கின் ஹாங்செங் 252.90, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 8.73, சீனாவின் சாங்காய் காம்போசிட் 36.29, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 8.56 புள்ளிகள் குறைந்து இருந்தது.
ஜப்பானின் நிக்கி 90.06 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.27 மணியளவில் 1135 பங்குகளின் விலை அதிகரித்தும், 357 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 37 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.378.43 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.410.85 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.