சென்செக்ஸ் 492-நிஃப்டி 144 புள்ளி உயர்வு

புதன், 10 டிசம்பர் 2008 (16:26 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், இறுதி வரை சிறிது வேறுபாட்டுடன் தொடர்ந்து உயர்ந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 492.28 (5.37%)புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,654.90 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 144.25 (5.18%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,928.25 ஆக உயர்ந்தது.

இதே போல் சுமால் கேப் 63.21, பி.எஸ்.இ 500- 147.35, மிட் கேப் 52.25 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1530 பங்குகளின் விலை அதிகரித்தது. 876 பங்குகளின் விலை குறைந்தது. 121 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்