பங்குச் சந்தையில் மாற்றம்

வியாழன், 4 டிசம்பர் 2008 (12:44 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிக ஏற்ற, இறக்கத்துடன் ஆரம்பித்த குறியீட்டு எண்கள், காலை 11 மணிக்கு பிறகு சீராக அதிகரிக்க துவங்கின.

காலை 10.06 மணியளவில் நிஃப்டி 14.70, சென்செக்ஸ் 68.83 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

பிறகு எல்லா பிரிவிலும் மாற்றம் இருந்தது. ஆனால் குறைந்த அளவே வர்த்தகம் நடந்தது.

பங்குச் சந்தைகளில் காலை 11 மணிக்கு பிறகு, மாற்றம் ஏற்பட்டது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

காலை 12.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 51.90 புள்ளிகள் அதிதரித்து, குறியீட்டு எண் 2,708.35 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 196.80 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 8,944.23 ஆக உயர்ந்தது.

இதே போல் மிட் கேப் 33.08, சுமால் கேப் 33.46, பி.எஸ்.இ. 500- 61.76 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 12.37 மணியளவில் 1197 பங்குகளின் விலை அதிகரித்தும், 621 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 66 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்