மும்பை: இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் நேற்று இரவு பயங்கராவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளின், இன்று தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதே போல் மல்டி கமோடிட்டி எக்சேஞ்ச் எனப்படும் பண்டக முன்பேர சந்தையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை பங்குச் சந்தை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மும்பையில் அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மாநில அரசு மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறித்தி உள்ளது. எனவே மும்பை பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.