பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. கடந்த ஆறு நாட்களாக இருந்து வந்த நிலையில் மாற்றம் இருப்பதாக தெரிந்தது. ஆனால் அதிக அளவு ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.
பங்குகளை வாங்கியவர்கள் இன்று விற்பனை செய்து இலாப கணக்கு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று பங்குச் சந்தை ஒரே நிலையாக இல்லாமல், அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்புள்ளது.
பங்குச் சந்தையில் தொடர்ந்து ஆறு நாட்களாக குறியீட்டு எண்கள் குறைந்தன. நேற்று கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தன. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்துள்ள நடவடிக்கையால் நிதி சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் வங்கிகளில் தொழில் நிறுவனங்கள் கடன் வாங்குவது அதிகரிக்கவில்லை.
இதற்கு காரணம் பொருளாதார மந்த நிலையால், தொழில், வர்த்தக நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.அவை உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. குறிப்பாக உருக்கு, வாகன தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை உற்பத்தியை குறைத்துள்ளன. இதே நிலை ரியல் எஸ்டேட், கட்டுமானம் உட்பட மற்ற துறைகளிலும் உள்ளது.
இதே நிலை இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் நீடிக்கிறது.
இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.10 மணியளவில் நிஃப்டி 21.70, சென்செக்ஸ் 56.02 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையும் நேற்று சரிவை சந்தித்தது. டோவ் ஜோன்ஸ் 444.99, நாஸ்டாக் 70.30, எஸ் அண்ட் பி 500-54.14 புள்ளிகள் குறைந்தன.
ஐரோப்பிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-130.69 புள்ளிகள் குறைந்தது.
காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 43.25 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2596.40 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 124.15 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 8,575.15 ஆக இருந்தது.
இதே போல் மிட் கேப் 4.76, சுமால் கேப் 4.49, பி.எஸ்.இ. 500- 32.22 புள்ளிகள் அதிகரித்தன.
ஆசிய நாடுகளில் இன்று சிலவற்றில் குறியிட்டு எண்கள் அதிகரித்தும், மற்றவைகளில் குறைந்தும் இருந்தன.
ஹாங்காங்கின் ஹாங்செங் 418.72, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 15.52, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 4.20 புள்ளிகள் அதிகரித்தது.
ஆனால் ஜப்பானின் நிக்கி 16.56, சீனாவின் சாங்காய் காம்போசிட் 84.95 புள்ளிகள் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.36 மணியளவில் 262 பங்குகளின் விலை அதிகரித்தும், 1436 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 36 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 762.94 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.426.95 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.