தங்கம் வெள்ளி விலை உயர்வு!

புதன், 19 நவம்பர் 2008 (14:11 IST)
தங்கம் வெள்ளி விலை உயர்வு!

மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 120 அதிகரித்தது.

இதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20 அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளிலும் பார் வெள்ளி, தங்கத்தின் விலை அதிகரித்தன.

1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 09.43/09.44 ஆக அதிகரித்தது. (நேற்றைய விலை 09.39/09.40). 24காரட் தங்கத்தின் விலை 738.00/738.50 ஆக அதிகரித்தது. (நேற்றைய விலை 736.00/736.25).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,070
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,005
பார் வெள்ளி கிலோ ரூ.16,815.

வெப்துனியாவைப் படிக்கவும்