டாலர் மதிப்பு 33 பைசா உயர்வு!

புதன், 12 நவம்பர் 2008 (13:59 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ.48.45 என்ற அளவில் விற்பனையானது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட, 33 பைசா அதிகம். (நேற்று இறுதி விலை ரூ.48.12).

பிறகு ரூபாய் மதிப்பு சிறிது அதிகரித்து, 1 டாலர் ரூ.48.66 முதல் ரூ.48.86 என்ற அளவில் விற்பனையானது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூபாயின் மதிப்பு 60 பைசா குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது.

பங்குச் சந்தையின் நிலவரத்தை பொறுத்து, டாலரின் மதிப்பில் மாற்றம் இருக்கும்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பரூ.48.79 பைசா. ( நேற்று ரூ.47.59)
1 யூரோ மதிப்பு ரூ.61.48 (ரூ.60.57)
100 யென் மதிப்பு ரூ.49.92 (ரூ.48.57)
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ. 75.41 (ரூ.74.55).

வெப்துனியாவைப் படிக்கவும்