மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா குறைந்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ.47.62 என்ற அளவில் விற்பனையானது.
இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட, 27 பைசா குறைவு. (நேற்று இறுதி விலை ரூ.47.35).
பிறகு ரூபாய் மதிப்பு சிறிது அதிகரித்து, 1 டாலர் ரூ.47.45 முதல் ரூ.47.62 என்ற அளவில் விற்பனையானது.
பங்குச் சந்தையில் நேற்று இருந்த நிலை மாறி, இன்று சரிவை சந்தித்தது. அத்துடன் அக்டோபர் மாதத்திற்கான ஏற்றுமதி குறைந்துள்ளது என்ற தகவலும் அந்நியச் செலவாணி சந்தையை பாதித்தன.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்: 1 டாலர் மதிப்பு ரூ.47.59 பைசா. ( நேற்று ரூ.47.32) 1 யூரோ மதிப்பு ரூ.60.57 (ரூ.60.73) 100 யென் மதிப்பு ரூ.48.57 (ரூ.47.82) 1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ. 74.55 (ரூ.74.20).