மும்பை:பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.05 மணியளவில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. நிஃப்டி 123.65 சென்செக்ஸ் 469.37 புள்ளிகள் அதிகரித்தன.
ரிசர்வ் வங்கி சனிக்கிழமை வங்கிகளின் குறுகிய கால கடன் ரிபோ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
அதே போல் வங்கிகளின் இருப்பு விகிதம், எஸ்.எல்.ஆர் எனப்படும் வங்கிகளின் இருப்பு விகிதம் ஆகியவைகளை குறைத்துள்ளது. இதன் மூலம் நிதிச் சந்தையில் ரூ.85 ஆயிரம் கோடி அதிகரிக்கும்.
இதையும் சேர்த்து, ரிசர்வ் வங்கி கடந்த ஒரு மாதத்தில் ரூ.2,70,000 கோடி பணப்புழக்கம் அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளை குறைக்க, வட்டி குறைப்பு உட்பட பல நடவடிக்கைககளை எடுத்து வருகின்றன.
சென்ற வாரம் அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாட்டு ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.
இதேபோல் இந்த வாரம் ஆஸ்திரேலியா, பிரிட்டன் உட்பட ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் வங்கிகளும் வட்டியை குறைக்க உள்ளன. ரஷிய அரசு அந்நாட்டு நிறுவனங்களிக்கு கடன் உட்பட பல உதவிகளை செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகளால் பங்குச் சந்தைஸ வங்கிகள், நிதிச் சந்தை உட்பட பல்வேறு தளங்களில் நெருக்கடி குறைந்து வருகிறது.
இதனால் பங்குச் சந்தையும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன்ஸ் 144.32, எஸ் அண்ட் பி 500-14.66, நாஸ்டாக் 22.43 புள்ளிகள் உயர்ந்தது.
அதே போல் ஐரோப்பிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-85.69 புள்ளிகள் அதிகரித்தது.
காலை 10.31 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 125.95 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3011.55 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 434.64 புள்ளிகள் அதிகரித்து.
இதே போல் மிட் கேப் 128.14, சுமால் கேப் 150.23, பி.எஸ்.இ. 500- 154.86 புள்ளிகள் அதிகரித்தன.
இன்று காலை ஹாங்காங்கின் ஹாங்செங் 740.06, சீனாவின் சாங்காய் காம்போசிட் 13.81, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 86.76, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 21.08 புள்ளிகள் அதிகரித்தன. ஜப்பான் பங்குச் சந்தை விடுமுறை.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.33 மணியளவில் 1488 பங்குகளின் விலை அதிகரித்தும், 382 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 36 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை 1,237.21 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 116.10 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.