பங்குச் சந்தைகளில் சரிவு!

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (10:54 IST)
மும்பை:பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலையில் 10.05 மணியளவில் நிஃப்டி 86.75, சென்செக்ஸ் 219.56 புள்ளிகள் குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 172.04, எஸ் அண்ட் பி 500-11.33 புள்ளிகள் அதிகரித்தது. அதே நேரத்தில் நாஸ்டாக் 11.84 புள்ளிகள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளி ல் நேற்று பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. மற்றவைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-46.94 புள்ளிகள் அதிகரித்தது.

ரிசர்வ் வங்கி இன்று பொருளாதார மற்றும் கடன் கொள்கையை அறிவிக்க உள்ளது. இதில் வட்டி குறைப்பு உட்பட பல்வேறு நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்தே பங்குச் சந்தை, நிதிச் சந்தையின் போக்கு இருக்கும்.

இந்நிலையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான “ஒபெக்” கூட்டம் நடைபெறுகிறது. இதில் பத்து இலட்சம் முதல் 15 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

ரஷியாவும் அதிக அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இது உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயின் பெரும் பகுதி ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. ரஷியா ஒபெக் அமைப்பில் உறுப்பினராக இல்லை.

எனினும் கச்சா எண்ணெய் விலை சரிவை தடுத்து நிறுத்த, ஒபெக் எடுக்கும் முடிவுக்கு அனுசரனையாக ரஷியாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கலாம்.

இந்தியாவில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. காலை 9 மணியளவில் 1 டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.50 முதல் ரூ.50.15 பைசாவாக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி விலையை விட 19 பைசா குறைவு.

காலை 10.34 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 87.50 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2977.65 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.31 மணியளவில் சென்செக்ஸ் 323.21 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,448.49 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 88.85, சுமால் கேப் 61.20, பி.எஸ்.இ. 500- 121.04 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளின் மூன்றாவது நாளாக குறியீட்டு எண்கள் குறைந்தது. ஹாங்காங்கினஹாங்செங் 641.52, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 84.08, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 87.45, ஜப்பானின் நிக்கி 591.19, சீனாவின் சாங்காய் காம்போசிட் 20.82 புள்ளிகள் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.46 மணியளவில் 384 பங்குகளின் விலை அதிகரித்தும், 1498 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 44 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 811.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 619.91 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்