11,000-த்தை நோக்கி மும்பை பங்குச் சந்தை!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டில் இன்று காலை முதலே உயர்வு காணப்பட்டது. பிற்பகல் 1.30 மணியளவில் 409 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 631.55 ஆக பிஎஸ்இ குறியீடு இருந்தது.

தேசியப் பங்குச் சந்தை - நிஃப்டி குறியீடு பிற்பகலில் 97 புள்ளிகள் உயர்ந்து 3,225.45 ஆக இருந்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சத்யம், ரிலையன்ஸ் இன்ப்ராடிரக்ஸர், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிடத்தக்க உயர்வைச் சந்தித்தன.

காலையில் இருந்தே உயர்வை எதிர்கொண்ட பங்குச் சந்தை குறியீடு, தொடர்ந்து உயர்வான நிலையிலேயே காணப்பட்டது. எனவே இன்று மாலை சந்தை நிறைவிலும், பங்குச் சந்தைகளில் உயர்வே காணப்படும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற சூழல் நிலவினால் இன்றோ அல்லது ஓரிரு நாளிலோ பிஎஸ்இ குறியீடு 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்