உயர்வுடன் முடிவடைந்தது பங்குச் சந்தை

திங்கள், 20 அக்டோபர் 2008 (16:38 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீடு (பிஎஸ்இ) இன்று மாலை சந்தை நிறைவடைந்த போது 247.74 புள்ளிகள் உயர்ந்து 10,223.09 ஆக இருந்தது.

கடந்த வார இறுதியில் பிஎஸ்இ குறியீடு 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்ற நிலையில், இன்று காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதுமே உயர்வை எதிர்கொண்டது.

நண்பகல்வாக்கில் 10,500-ஐ நெருங்கிய பிஎஸ்இ குறியீடு, பிற்பகலில் சற்றே இறங்கி வந்தது. முடிவில் சந்தை முடிவடைந்த போது 247.74 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து நிறைவடைந்தது.

டிசிஎஸ், விப்ரோ, சத்யம், இன்ஃபோசிஸ் ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் உயர்வை எதிர்கொண்டன. ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவு உயர்வை எதிர்கொண்டன.

இதேபோல் நிஃப்டி -தேசியப் பங்குச் சந்தை குறியீடு இன்று மாலையில் சந்தை நிறைவடைந்த போது 48 புள்ளிகள் உயர்ந்து 3122.80 ஆக இருந்தது.

முன்னதாக நிஃப்டி குறியீடு காலையில் ஏற்றத்தை எதிர்கொண்ட போதிலும், பிற்பகல்வாக்கில் சற்றே கீழிறங்கி மீண்டும் உயர்வை எதிர்கொண்டதால், சந்தை முடிவில் ஏற்றத்துடன் காணப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்